Friday, July 10, 2009

தமிழ் - பழமையான, இனிமையான மொழி

இது என் இரண்டாம் இடுகை. பிழை இருப்பின் கருதுரைகலில் எழுதவும்.எப்பொழுதுமே பழமையான மொழி எது என்று ஒரு விவாதம் இருக்கத்தான் செய்கிறது. பலர் அவர்களது மொழி தான் பழமை வாய்ந்தது என்று வாதாடுவர், அதில் நான் மட்டும் விதிவிலக்கு அல்ல. ஆனால் நான் பல மேற்கோள்களை காட்டி உள்ளேன். இது "தமிழ்" மொழி பற்றிய கட்டுரை என்பதை நான் கூறி தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை.

பலர் தமிழ் மொழி அசோகரின் ப்ரஹ்மி எழுது வடிவில் இருந்து உருபெற்றது என்ற ஒரு கருத்தில் உள்ளனர்

ப்ரஹ்மி வடிவம் என்பது ப்ரஹ்மி எழுது குடும்பத்தில் இருக்கும் பழமையான எழுத்துக்களுக்கு கொடுக்க பட்ட புதிய பெயர் ஆகும். மத்திய மேற்கு இந்தியாவில் கிடைத்த அசோகரது கல்வெட்டுக்களே பழமை வாய்ந்தவை என்று அனைவராலும் கருத பட்டது, அவை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகரது ப்ரஹ்மி எழுத்து வடிவில் உள்ளதாகும். இவை தான் ப்ரஹ்மி எழுத்து வடிவத்தின் பழங்காலத்து பதிவுகளாக கருத பட்டது. இந்த எழுது வடிவம் ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் 1837 ஆம் வருடம் மொழி பெயர்க்கப்பட்டது. இவர் ஒரு தொல்
பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்தியா கம்பெனியின் அதிகாரி ஆவார்.

ஆனால் நான் இணைய தளத்தில் பார்த்த வரை, கீழே சிலவற்றை கூறி உள்ளேன். "உலகின் முதல் பாரம்பரிய மொழி" என்பது
தேவநேய பாவாணர் எனபவரால் 1966 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்த நூலில், பாவாணர் சமஸ்க்ரிதத்தை விட தமிழ் தான் "உயர்ந்த மற்றும் அதிக தெய்வீக தன்மை" வாய்ந்தது என்று கூறி உள்ளார். அவருடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழ் மொழி "லெமுரியா" கண்டத்தில் இருந்து பிறந்தது என்கிறார்.





பாவாணரின் கண்ணோட்டத்தில் "லெமுரியா". மடகாஸ்கார், தெற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களை உள்ளடக்கியது தான் லெமுரியா என்கிறார் [ஆதாரம் : www.wikipedia.org]




பாவாணரின் கண்ணோட்டத்தில் மனிதன் மற்றும் தமிழின் வளர்ச்சி கீழே கொடுக்க பட்டுள்ளது:


500,000
கி.மு : மனித குலத்தின் ஆரம்பம்
200,000 to 50,000
கி.மு : தமிழனின் வளர்ச்சி
200,000 to 100,000
கி.மு : தமிழின் ஆரம்பம்
100,000 to 50,000
கி.மு : தமிழின் வளர்ச்சியும் முன்னேற்றங்களும்
50,000
கி.மு : குமரி கண்டத்தின் சமூக வளர்ச்சி
20,000
கி.மு : கிழக்கு தீவில் இருந்த உயர்ந்த தமிழ் சமூக பாரம்பரியம் அழிந்து போனது
16,000
கி.மு : லெமுரியா கடலுக்குள் சென்றது
6087
கி.மு : இரண்டாம் தமிழ் சங்கம் பாண்டிய மன்னரால் நிறுவப்பட்டது
3031
கி.மு : ஒரு சேர இளவரசன் சாலமன் தீவில் சுற்றி கொண்டிருக்கும் போது கரும்பை பார்த்து, அதன் பின் தமிழ் நாட்டில் விவசாயத்தை ஆரம்பித்தான்.
1780
கி.மு : பாண்டிய மன்னரால் மூன்றாம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டது
7th century
கி.மு : தொல்காப்பியம், பழமையான தமிழ் மொழியின் இலக்கணம்
[ஆதாரம் : www.wikipedia.org]

மேலே காட்டியிருப்பது போல,
தொல்காப்பியம் கி.மு ஏலாம் நூற்றாண்டில் எழுத பட்டது என்றால் அது எப்படி கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்த ப்ரஹ்மி எழுத்து வடிவத்தில் இருந்து எடுக்க பட்டிருக்கும்?

தமிழ் முதல் பழமையான, சிறந்த மொழி என்பதற்கான சில விளக்கங்கள் :

1. தமிழ் லெமூரியாவில் ஆதாரம் கொண்டு பிறந்தது
2. உச்சரிப்பில் எளிமையாக
இருப்பது
3. அனேகமாக அனைத்து பெரிய மொழிகளிலும் எதோ ஒரு வகையில் "அம்மா" , "அப்பா" என்ற வார்த்தைகள் இருப்பது
4. தமிழில் இயற்கையான எழுது அமைப்பு
5. தமிழின் இயற்கையான மற்றும் சொந்தமான வளர்ச்சி
[ஆதாரம் : www.wikipedia.org]

மேலே உள்ளவை நம்பும் படியாக இல்லை என்றால், கீழே சில ஆதாரங்கள் தரப்பட்டு உள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரம் :

சமீபத்தில் "தமிழ்நாட்டில்" உள்ள "ஈரோட்டுக்கு" அருகில் உள்ள "கொடுமணல்" என்ற இடத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழ் பதிந்த கற்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளது.


இன்னொரு சமீபத்திய
தொல்பொருள் ஆராய்ச்சியில் "தமிழ்நாட்டில்" உள்ள "தேனீ" பகுதியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு சொந்தமான தமிழ் பதித்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

எனது நண்பர் ஒருவர் கீழே உள்ள சிறப்பு பத்தியை சுட்டி காட்டினார்

தமிழின் இன்றைய எழுத்து வடிவம் உருப்பெறுவதற்கான மூல வடிவம் தமிழிதான். அதிலிருந்து ஒரே சமயத்தில் மூன்று எழுத்துருக்கள் வெவ்வேறு இடங்களில் நிலைபெறத் தொடங்கின. தென்தமிழ்நாட்டில் வட்டெழுத்துக்களும், வடதமிழ்நாட்டில் தமிழ் எழுத்துக்களும் தோன்றின. அசோகர் பிராகிருத மொழியை எழுதுவதற்காக இத்தமிழியைக் கடன்வாங்கிப் பயன்படுத்தியதால், வட இந்தியாவில் இது அசோகன் பிராமி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஹிந்தி, பஞ்சாபி முதலான வடமொழிகள் நாகரி எழுத்துமுறையிலிருந்து தோன்றினாலும், நாகரி எப்பொழுது தோன்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் கிடைக்கும் காலத்தால் மிகவும் முற்பட்ட நாகரிக் கல்வெட்டு இராஜசிம்மருடையதாகும். மாமல்லபுரம் புலிக்குகை எனப்படும் அதிரணசண்டேசுவரத்தின் வாயிலில் ஒரு புறம் கிரந்தக் கல்வெட்டும், மறுபுறம் அதே கல்வெட்டு நாகரியிலும் வெட்டப்பட்டுள்ளன. இதைக்கொண்டு, குறைந்த பட்சம் அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழகத்தில் நாகரி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், வட இந்தியாவில், அசோகருக்கும் இராஜசிம்மருக்கும் இடைப்பட்ட காலத்தில் நாகரி தோன்றியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [
ஆதாரம் : www.varalaaru.com]

இதை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள விரும்பினால், இங்கே கொடுக்க பட்டுள்ள தொடர்புக்கு செல்லவும் http://www.varalaaru.com/Default.asp?articleid=357

நான் போதுமான மேற்கோள்களை காட்டி உள்ளேன் என்று நம்புகிறேன். இருப்பினும் உங்களால் அதை ஏற்க முடியவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உங்களுக்காகவே. நானும், எனது நண்பரும் இன்றைய எழுது முறையை பழங்காலத்து எழுது முறைக்கு மாற்றி அமைக்க முயற்சித்தோம். அதன் முடிவை கண்டு வியந்தோம். இது தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களை எடுத்துகாட்டாக கொண்டு வரைய பட்டது. அசோகரது ப்ரஹ்மி எப்படி ஆதி காலத்து தமிழுடன் ஒத்து போகிறது என்று நீங்களே பார்க்க இயலும்.
மெய் எழுத்துக்களை நீங்கள் முயற்சித்தாலும் உங்களுக்கு விடை கிடைக்கும்.


இதில் முதல் ஆறு வரிசைகளில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் ஆகும். கடைசி இரண்டு வரிசையில் உள்ள எழுத்துக்கள் அசோகரது ப்ரஹ்மி எழுது வடிவம் ஆகும். பரிணாம வளர்ச்சியை காண்பிப்பதற்காக ஒவ்வொரு எழுத்தையும் மூன்று கட்டங்களாக பிரித்து உள்ளோம். நீங்கள் ஒவ்வொரு எழுத்தையும் முடிந்த வரையில் குறுகிய காலத்தில் எழுத முயற்ச்சிக்க வேண்டும்.

நாங்கள் காட்டியிருப்பது போல வரிசை 'a' வில் உள்ளது பழங்காலத்து தமிழ் எழுத்து வடிவம்.

ப்ரஹ்மி எழுத்து வடிவம் தமிழ் மொழியுடன் ஒத்து போவதை பார்க்க முடிகிறதா?
யார் என்ன வேண்டுமானாலும் வாதாடி கொண்டு இருக்கட்டும், என் மனதில் என் தமிழ் மொழி தான் மிகவும் பழமையான, செம்மையான, உலகில் முதல் தோன்றிய மொழி...

இவ்வேளையில் எனது இரண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

ரா.செல்வக்குமார்
- இன்றைய தமிழ் எழுத்துகளில் இருந்து பழங்காலத்து எழுத்துக்களை கணிக்க உதவியதற்காக.
ம.ராம்கிருஷ்ணன் -
தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரம் மற்றும் சிறப்பு பத்தியை எனக்கு சுட்டி காட்டியதற்காக.

நான் சில இணைய தளங்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்

www.wikipedia.org
www.varalaaru.com
www.google.com

இங்கே கூறப்பட்டுள்ள தளங்கள் மூலம் சில ஆதாரங்களை திரடியுள்ளேன்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete